கல்பாக்க சாதனை
நாட்டில் இப்போதுள்ள அணு மின்சார நிலையங்களில் அநேகமாக அனைத்துமே சாதாரண யுரேனியத்தைப் பயன்படுத்தி வருகின்றன. எனினும் இந்தியாவில் யுரேனியம் நிறையக் கிடைப்பதாகச் சொல்ல முடியாது.
தோரியம் என்ற அணுசக்திப் பொருள் இந்தியாவில் நிறையக் கிடைக்கிறது. கேரளக் கடற்கரை, மற்றும் குமரி மாவட்டத்தின் கடற்கரையோர மணலில் கிடைக்கின்ற ஒரு பொருளில் தோரியம் அடங்கியுள்ளது. இந்தத் தோரியத்தைக் குறிப்பிட்ட வகை யுரேனியமாக மாற்றி அதைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் வழக்கமான அணுமின்சார நிலையம் ஒன்று அமைந்திருக்க ஈனுலை எனப்படும் பரீட்சார்த்த அணுசக்தி நிலையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த ஈனுலையானது தோரியத்தை அணுமின் நிலையங்களுக்கான எரிபொருளாக மாற்றும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டதாகும். 1985-ம் ஆண்டிலிருந்து இந்த ஈனுலை வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
(*)எந்த அணு உலையிலும் ""எரிந்து தீர்ந்த'' அணுசக்திப் பொருளைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வெளியே எடுத்து விடுவர். அப்படி வெளியே எடுக்கப்பட்ட பொருளானது தூக்கி எறியப்பட வேண்டிய கழிவுப்பொருள் அல்ல. இப்போது இவற்றிலிருந்து யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் தனித்தனியே பிரித்தெடுப்பதில் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். (*)
உலகில் வல்லரசு நாடுகளிலும் சரி, ஈனுலை என்பது மிக அபூர்வமே. அதிலும் ஈனுலையில் இந்தியா பயன்படுத்தும் வடிவிலான எரிபொருளை யாரும் பயன்படுத்திப் பார்த்தது கிடையாது. ஆகவே இக் கலவைப் பொருளிலிருந்து யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பிரித்து எடுத்தது உலகச் சாதனையாகக் கருதப்படுகிறது.
கல்பாக்கம் அணுமின் நிலையமும் ஈனுலையும் இந்தியா சொந்தமாக வடிவமைத்து நிறுவியவையாகும். இது விஷயத்தில் நாம் நிச்சயமாகப் பெருமைப்படலாம்.
[[[[ *** நன்றி: தினமனி ***]]]]
*** இப்பதிப்பு செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் பதியப்பட்டது.
- டண்டணக்கா
0 Comments:
Post a Comment
<< Home