1-10-11-10-00-10-11-01-0

Wednesday, June 22, 2005

தமிழ் நாட்டுக் குப்பை சாதனை

(*) கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துவக்கப்பட உள்ளது. இதற்காக மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
(*) கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட் பகுதிகளில் தினமும் 100 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
(*) இவைகள் கொடுங்கையூரில் கொட்டப்படுகின்றன. குப்பைகள் அகற்றுவதற்காக மாதாமாதம் ஆறு லட்சம் ரூபாய்வரை சி.எம்.டி.ஏ., செலவு செய்து வந்தது.
(*) வீணாகும் குப்பைகளை பயனுள்ள வகையில் மாற்ற முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது. குப்பைகளில் இருந்து மின்சாரம் மற்றும் உயிர் உரங்கள் தயாரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது
(*) கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திலேயே இதற்காக மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ. ஐந்து கோடி செலவில் பணிகள் மின் உற்பத்தி நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
(*) 30 டன் மட்டுமே தற்போது மின்சாரப்பணிக்கு பயன்படுத்த முடியும். அதற்கு ஏற்றவாறு தான் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது
(*) மார்க்கெட்டில் இருந்து பெறப்படும் 30 டன் குப்பைகள் மூலம் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 800 யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஆண்டுக்கு 17 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். அத்துடன் ஒரு நாளைக்கு 10 டன் உயிர் உரமும் கிடைக்கும்

[[[[ *** நன்றி - தினமலர் *** ]]]]
*** இப்பதிப்பு செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் பதியப்பட்டது.
- டண்டணக்கா

1 Comments:

Anonymous Anonymous said...

உங்கள் வெப்சைட் மிகவும் நன்றாக உள்ள்து.

இப்படிக்கு


ப்றீயா

January 08, 2006

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.