1-10-11-10-00-10-11-01-0

Tuesday, July 05, 2005

காமராஜ் - 101 [ #2 ]

தமிழகத்தில் ஆறுகளுக்கு பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை நதி என ஆறு பல ஓடியது. ஆனால் கரிகாலன் என்ற சோழமன்ணன் காவிரியின் குறுக்கே கட்டியது கல்லணை. அதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டுர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி-குந்தா அணை பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். மறக்க(டிக்க)ப்பட்ட அந்த நெடிய் பட்டிட்யலை பாருங்கள். (இதில், கால்வாய் மற்றும் ஏரி திட்டங்களையும் சேர்த்து தந்துள்ளேன்):

1. ரூ 5 கோடியில் மலம்புழா அணை - 46,000 ஏக்கர் பாசன வசதி
2. தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை - 20,000 கூடுதல் பாசன வசதி
3. ரூ 3 கோடியில் அமராவதி அணை - 47,000 ஏக்கர் பாசன வசதி
4. ரூ 2.5 கோடியில் சாத்தனூர் அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
5. ரூ 2.5 கோடியில் வைகை அணை - 20,000 ஏக்கர் பாசன வசதி
6. ரூ 1 கோடியில் வாலையார் அணை - 6,500 ஏக்கர் பாசன வசதி
7. ரூ 50 லட்சத்தில் மங்கலம் அணை - 6,000 ஏக்கர் பாசன வசதி
8. ரூ 1 கோடியில் ஆரணியாறு அணை - 1,100 ஏக்கர் பாசன வசதி
9. ரூ 2 கோடியில் கிருஷ்ணகிரி அணை - 7,500 ஏக்கர் பாசன வசதி
10. வீடுர் அணை.
11. (*) பரம்பிக்குளம் - ஆழியாறு அணைகள்.
12. ரூ 2.5 கோடியில் மேட்டூர் பாசன கால்வாய் - 45,000 ஏக்கர் பாசன வசதி
13. ரூ 30 லட்சத்தில் புதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்
14. ரூ 10 கோடியில் கீழ் பவானி திட்டம் - 2,00,000 ஏக்கர் பாசன வசதி
15. ரூ 1.5 கோடியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம் - 36,000 ஏக்கர் பாசன வசதி
16. ரூ 1.5 கோடியில் புள்ளம்பாடி திட்டம் - 22,000 ஏக்கர் பாசன வசதி
17. ரூ 1.5 கோடியில் மீனக்கரை ஏரித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
18. ரூ 75 லட்சத்தில் மணிமுக்தா நதித்திட்டம் - 4,000 ஏக்கர் பாசன வசதி
10. ரூ 75 லட்சத்தில் கோமுகி ஆற்றுத்திட்டம் - 8,000 ஏக்கர் பாசன வசதி
20. ரூ 75 லட்சத்தில் தோப்பியார் ஏரி - 2,500 ஏக்கர் பாசன வசதி

(*) அனைத்து அணைகளின் மணிமகுடம் பரம்பிக்குளம் - ஆழியாறு அணை, இது சுவாரஸ்யமான மற்றும் ஒரு tchnology-feet, தனியாக ஒரு நாள் விளக்குகிறேன் அதன் கதையை.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: (64) அமைச்சு
குறள்:
கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
பொருள்:
ஒரு செயலை செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு
ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய
அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
My special thanks goes to the sources listed in below link.
http://dandanakka.blogspot.com/2005/04/blog-post.html
This series is made possible by those sources, somtimes
the contents are reproduced. Either way the credit goes
to sources.

4 Comments:

Anonymous Anonymous said...

புதிய தகவல் - நன்றி

July 06, 2005

 
Blogger கிவியன் said...

மிக நல்ல பதிவு. 101 என்று ஆரப்பித்துள்ளீர்கள். 101 வரை பதிந்தால் அது
அந்த மாபெரும் தலைவனுக்கு செய்யும் மரியாதையாக அமையும். இதை படித்தாவது
எதிர்காலத்தில் ஒரு நல்ல அரசியல்வாதி வரவேண்டும். பின்னூட்டம் கம்மியாமிருக்கேன்னு பாத்து நிப்பாட்டிரதிங்க. தொடருகள்.

July 07, 2005

 
Blogger Sridhar Sivaraman said...

நல்ல முயற்சி இடையில் நிறுத்தாமல் தொடரவேண்டும் என்பது எனது ஆசை.பச்சைத்தமிழன் என்று போற்றபட்ட பெரும்தலைவர் ஒட்டுமொத்த தமிழர் நலனுக்காக உழைத்தவர், இன்று ஏதோ அவர் பிறந்த சாதிக்குமட்டும் உழைத்தது போன்று ஒரு பிம்பம் ஏற்படுத்தபடுகிறது, இது களயபட வேண்டும், அதற்கு உங்களது இந்த முயற்சியும் உதவியாக இருக்கும்.

July 11, 2005

 
Blogger டண்டணக்கா said...

சம்மி, அனானிமஸ், சுரேஷ் மற்றும் சிவராமன் - உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தாமதத்திற்க்கு மன்னிக்கவும், ஒரு வாரம் கழிச்சு பார்க்கிறேன்.
-டண்டணக்கா

July 13, 2005

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.