1-10-11-10-00-10-11-01-0

Wednesday, November 09, 2005

T.V சேனல் - சன், ஜெயா, மற்றும் ...

இதில் எழுதப்பட்டவை யாவும் எந்த ஒரு T.V சேனல் மீதான எனது தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளை பிரதிபளிப்பது அன்று. இது என்னளவில் தோன்றிய ஒரு "பொருளாதார சந்தை" சார்ந்த எண்ணங்கள் மற்றும் ஒரு ஆய்வுப் பார்வையே. மேலும் இது 6 மாதத்திற்க்கு முன்பு எழுதி, பதிக்க மறந்த கோப்பு.

தமிழ் நாட்டில் தனியார் தொலைக்காட்சியின் சந்தை நிலவரம் அனைவரும் அறிந்ததே. சன் டிவி, ஜெயா, ராஜ், விஜய், மற்றும் பல. இவற்றை தமது விளம்பரங்களுக்கு பயன்படுத்தி, மக்களுக்கு தமது தாயாரிப்புகளை சிறப்பான முறையில் மனனம் செய்வித்து, சந்தையை கையகப்படுத்திய நிருவனங்கள் சில. (எ.கா) பவர் சோப், லயன் டேட்ஸ், குங்குமம்.
இதில் சன் டிவின் சந்தை ஆளுமை பகல் வெளிச்சம். நாம் தமிழ் சேனல் பார்க்க வேண்டுமெனில், இந்த 4+ சேனலை தவிர வழி இல்லை. இதனால் இரு பாலருக்கு வருத்தம் இருத்தது:

(1) பார்வையாளர்கள்: வீட்டில் டிவி பார்க்கும் நாம் - இவர்களது மோசமான நிகழ்ச்சிகளில், குறைவான மோசத்தை தேர்வு செய்து பார்க்கும் நிலை. மேலும், நாம் விரும்பாவிட்டாலும், நமது வரவேற்பரையில் இவர்களது ஆதிக்கம் (அம்மா, அப்பா, யாராவது மதியமே ஆன் செஞ்சுடுவாங்க...)

(2) வியாபாரிகள்: வியாபாரிகளுக்கு, இந்த சேனலில் விளம்பர கட்டணங்கள் மலைப்பானது. பாம்பே டையிங் கம்பெனிக்கும், பவர் சோப்புகும் அவ்வளவு பெரிய கட்டணம் சரி வரும். ஆனால் சிரிய தொழில் முனைவர்களுக்கு இக்கட்டணம் மிக மிக அதிகம், அசாத்தியமானது. அதற்காக, சிறிய தொழில்களுகு டி.வி விளம்பரம் தேவையற்றது என கிடையாது. அவர்களுக்கும் தேவை, ஆனால் எட்டாக் கனி.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த சேனல்கள் தமது சந்தை ஆளுமையை நம் வீட்டில், நம் நேரத்தில், நம் பொருள் தேர்வில் அப்பட்டமாக நிறுவி உள்ளனர். நீங்கள் வேறு நாட்டில் இருத்தால் வேரு 4+ சேனல் - அவ்வளவுதான் வித்யாசம். இதற்க்கு முதற் காரணம், நாம் தேர்வு செய்ய, பட்டியலில் இந்த 4 மட்டுமே உண்டு. எனவே நீங்கள் எப்போது டிவி-யை ஆன் செய்து தமிழ் T.V பார்க்க வேண்டுமெனில் இதுதான் தமிழ் நாட்டின் நிலை.
இது முன்பு வரை, இந்த முறை நான் ஊர் சென்ற போது, நிலவரமே தழை கீழ்.

இந்த முறை நான் புதிதாக சில சேனல்கல் பார்த்தேன் - "அன்பு T.V, முகில் T.V". விசாரித்த போதுதான் தெரிந்து அவை "லோக்கல் T.V சேனல்" என்று. ஓ, இது முன்னாடியெல்லாம் இருந்த, படம் போடும் கேபிள் T.V போலன்னு நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது இது வேறுமாதிரி என்று. 3 வருசம் முன்னாடி இருந்த கேபிள் T.V, அதிகபட்சம் 400/500 வீட்டுக்கு போகும், ஒரு கிராமத்தி 2/3 வெவ்வேறு கேபிள் T.V இருக்கும். ஆனால் இப்போது நான் பார்த்த "லோக்கல் T.V சேனல்" குறைந்தது 40/50 கிராமங்கள் தெரியும் என ஒரு சேனல் நடத்தும் நண்பண் கூறினான். என்னது, 50 கிராமதில் கேபிள் கனெக்சன் உள்ளா எல்லார் வீட்டிலுமா?, அதிசயித்தேன். பல கேள்விகள் என்னுல் எழுத்தன - எப்படி 50 கிராமத்தில் தெரிகின்றது? எப்படி சாத்தியப்பட்டது? முதலில் இப்படி ஒரு சேனல் நடத்த யார் லைசென்ஸ் தந்தது? என பல எப்படி, எப்படி கேள்விகள். ஆனால் அதற்க்கு முன்னால், இந்த "லோக்கல் T.V சேனல்" எற்படுத்திய மாற்றத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் பார்த்த இடங்களில் எல்லாம், பகல் பொழுதில் "லோக்கல் T.V சேனல்" ஆதிக்கம்தான், மாலை 6 - 7 மணி வரை தொடர்கிறது, அதுவரை சன், ஜெயா T.V கள் அடங்கித்தான் கிடக்கின்றன, 7 மணிக்கு மேலேதான் (அழுகை) நாடங்கள் மாற்றப்ப்டுகின்றன. ஏதனால் இப்படி, இந்த "லோக்கல் T.V சேனல்" பகல் ஒளிபரப்பு அப்படி... முழுவதும் பாட்டு, காமெடி மாற்றி மாற்றி - அவை மட்டும் தான். எல்லாம மீடியம், லேட்டஸ்ட் ஹிட் பாட்டுக்கள், மற்றும் வடிவேலு, விவேக், மற்றவர்களி வெடி காமெடிகள். இவைதான் பகல் முழுவதும். இதில் சிறப்பு, கடுபப்டிக்கும் காம்பியர்கள் கிடையாது, வரிசையாக பாட்டுகள், காமெடிகள், இடையே விளம்பர்ங்கள் - விளைவு, சமைக்கும் வீடானாலும், டீ குடிக்கும் கடையானாலும் இந்த "லோக்கல் T.V சேனல்" -கள் சூப்ப்ர் ஹிட். இந்த "லோக்கல் T.V சேனல்"-களுக்கு சன்,ஜெயா பொல எம்ளம் (சின்னம்)-மும் உண்டு. இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த "லோக்கல் T.V சேனல்" -களின் தாக்ககம் அந்த 40 கிராமங்களிலும் எப்படி ஏற்ப்பட்டது என்று. (எப்படியோ சன், ஜெயாவின் அழுகாச்சி சீர்யல்களை பகலில் முறியடித்தது ஒரு சாதனை.)

இப்பொழுது எதனால்/எப்படி இந்த "லோக்கல் T.V சேனல்" -கள் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியப்பட்டது எனப் பார்ப்போம்.

[தொடரும்]

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.