1-10-11-10-00-10-11-01-0

Monday, August 15, 2005

காமராஜ் - 101 [ # 6 ]

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

"ஏன்?... இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார்.

என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை".

-------------------------------------------------------------------

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (47)

குறள்:
தெரிந்த இனத்தொடு தேர்ந்து, எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்

பொருள்:
தேர்ந்துகோண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து, திட்டமிட்டு செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
My special thanks goes to the sources listed in below link.
http://dandanakka.blogspot.com/2005/04/blog-post.html
This series is made possible by those sources, somtimes
the contents are reproduced. Either way the credit goes
to sources

12 Comments:

Blogger Jayaprakash Sampath said...

காமராஜர் பற்றிய கட்டுரைகளை இப்பத்தான் சேர்த்து வைத்துப் படித்தேன். நிறைய தகவல்களுடன், நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.

August 15, 2005

 
Anonymous Anonymous said...

Knitting Blogs
Knitting Blogs I love crafty stuff. And, even though the idea of taking up knitting is just that for me right now: an idea --- I can at least check out some of these knitting blogs .

Hi there,

nice blog, I stayed quite long reading interesting stuff. Good work. Think, I will
bookmark it an come back.

If you get some time, be sure to check out my in granite
related website.

August 15, 2005

 
Blogger ENNAR said...

நன்றாக இருந்தது டண்டணக்கா
பெருந்தாலைவர் காமராஜ் ஐயா அவர்கள் எங்கள் ஊருக்கு BHEL கொண்டு வந்ததைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டது.
நேரு விடம் கேரள முதல்வரும் ஆந்திர முதல்வரும் தங்களுக்கு தான் அந்த கணரக தொழிற்சாலை வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது ஐயா அவர்கள் சென்றிருக்கிறார்,"எனது ராமனாதபுரம் மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது எனக்கு கொடுங்கள்" என கேட்கும் போது நேரு அவர்கள்,"நீங்களே பேசி ஒரு முடிவெடுத்துக் கொள்ளுங்கள்", என கூறிவிட்டார் ஆந்திராவிற்கு வேறு ஒரு தொழிற்சாலையையும் கேரள மக்களுக்கு ஒரு குறிப்பிட் (10 ஆயிரமோ 6 ஆயிரமோ ஞாபகம் இல்லை) இதில் வேலை தருவதாக கூறி BHEL அதாவது பாய்ளர் பிளாண்ட்டை கொண்டுவந்தார் இராமநாதபுரம் சரியில்லாததால் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியை தேர்ந்தெடுத்ததாக நான் கேள்விப்பட்டேன்.
என்னார்

August 15, 2005

 
Blogger -L-L-D-a-s-u said...

இவரைப்போல இன்னொருவர் எப்போது வருவார் .. இவர் பெயர் கூறுவோரும் போலிகளாய் உள்ளனரே ..

August 15, 2005

 
Anonymous Anonymous said...

Knitting Blogs
Knitting Blogs I love crafty stuff. And, even though the idea of taking up knitting is just that for me right now: an idea --- I can at least check out some of these knitting blogs .
Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

I have a royal caribbean cruise site. It pretty much covers royal caribbean cruise related stuff.

Come and check it out if you get time :)

August 15, 2005

 
Anonymous Anonymous said...

It's Your Business: Blogosphere largely untapped for advertising
By now, almost everyone who lays hands on a keyboard knows about blogs. According to one of the search engines for blogs, Technorati.com, there are currently 14.4 million blogs in the Blogosphere.
Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!

I have a Car Satellite TV site. It pretty much covers Car Satellite TV related stuff.

Come and check it out if you get time :-)

August 15, 2005

 
Blogger டண்டணக்கா said...

வாங்க icarus prakash, Ennar , --L-L-D-a-s-u--- : வருகைக்கு நன்றி.

icarus prakash, ஊக்கத்திற்க்கு நன்றி , கட்டாயம் தொடர்ந்து எழுதும் முடிவில்தான் உள்ளேன். நேரம் கிடைக்கும் போது இந்த பக்கம் வந்து போங்க.

வாங்க என்னார், BHEL மட்டுமா, அந்த வரிசை பெரிசு... கல்பாக்கம், சேலம் ஸ்டீல், ஆவடி ரயில் தொழில்சாலை...அட அந்த லிஸ்ட் பெருசுங்க. ஒவ்வொன்னா எழுதுறேன்.

என்ன தாஸ் இது.... புது விஷயமா என்ன. போலியாவது பரவாயில்லா, மத்த கேடிகளையெல்லாம் என்னான்னு சொல்றது. அவர் உயிரோட இருந்த போதே கேடித்தனத்த காமிச்ச தலைகளெல்லாம் வேற இருக்கு....என்னமோ போங்க.

August 15, 2005

 
Blogger ENNAR said...

அனைத்தையும் எழுங்கள்
என்னார்

August 15, 2005

 
Blogger கிவியன் said...

டண்டணக்கா வாரம் ஒண்னுன்னு ஒரு கணக்கு வெச்சா கூட 101க்கு 2 வருஷம் ஆகிப்போகும். அதனால வாரத்துக்கு 2க்கு மேல பதியவும், இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

August 16, 2005

 
Blogger டண்டணக்கா said...

வாங்க சுரேஸ். 101ன்னு தலைப்பு வச்சது, புக்ஸ்ல அடிப்படைகளை விளக்கும் dummies, chicken soup, idot's guide, 101 வருதுல்ல, அந்த மாதிரி "காமராஜ்" பற்றிய அடிப்படை விஷயங்களை சொல்ல முடிவெடுத்து எழுதுவதால், அதே சாயலில் "காமராஜ் 101"ன்னு தலைப்பு வச்சேன். மற்றபடி, நம்மூர் மொய் கணக்கு மாதிரி 101ன்னு வைக்கல. அதனால சரியாக 101 பதிப்பு வரும்ன்னு சொல்றது கஷ்டம். நான் சொல்ல வந்ததையெல்லாம் சொல்ற வரைக்கும் போய்க்கிட்டு இருக்கும். சொல்ல முடியாது 101ன்னுக்கு மேல போனாலும் சொல்றதுக்கில்ல.
மத்தபடி, வாரத்துக்கு 2 இல்லாட்டி 3-ஆவது எழுதனும்னு ஆசைதான், எங்க நடக்குது. ஆபிஸ்லதான் சக்கைய புழியிராங்களே, அந்த கொடுமைய் ஏன் கேங்குறீங்க. இருந்தாலும் கட்டாயம் முயற்சிக்கிறேன்.
-டண்டணக்கா

August 17, 2005

 
Blogger தருமி said...

அந்த நல்லவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
நல்லவர் அவரைப் பற்றியெழுதி அவருக்குப் புகழ் சேர்க்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி.

September 25, 2005

 
Blogger ENNAR said...

விடுதலை நாளில் தமிழகத்தை ஆண்ட முதல் பச்சைத்தமிழன்னின் நினைவா? வாழ்க அவரது புகழ்

August 15, 2007

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.