1-10-11-10-00-10-11-01-0

Monday, August 08, 2005

காமராஜ் - 101 [ # 5 ]

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து "சைரன்" என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். "அது என்னையா சத்தம்?" காமராஜ்.

"ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்" என்றார் காவல்துறை அதிகாரி. "இதோ பாருங்க... இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்... எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி - நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: குடியியல்

குறள்:
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புவுடைமை என்னும் வழக்கு

பொருள்:
எவரிடத்தும் எளிமையாக நடந்து கொள்வதல்,
பண்புடைமையை எளிதாக அடையலாம் என்று
அறிஞர் கூறுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
My special thanks goes to the sources listed in below link.
http://dandanakka.blogspot.com/2005/04/blog-post.html
This series is made possible by those sources, somtimes
the contents are reproduced. Either way the credit goes
to sources

2 Comments:

Blogger கிவியன் said...

இப்ப இருக்ரவங்களுக்கு இது பத்தி சொன்னா இவரு எதோ வேற்று கிரகவாசி மாதிரிதான் தெரிவாரு.

August 09, 2005

 
Blogger டண்டணக்கா said...

வாங்க கிவி, A-A,
என்ன பண்றது, இன்று தலைவர்/வி என்ற டைடிட்ல் கொண்டுள்ளவர்களின் இலட்சணம் அப்படி. அவுங்க எப்படி அலங்கோலமா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். அது நமது தலைமுறையின் தலையெலுத்து. ஆனா தலைமை/தலைவர் என்பதன் இலக்கணம் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிடில், அடுத்த தலைமுறை தவறாக இந்த அவலட்சணங்களையே தலைமை என்பதன் பொருளாக எடுத்துக் வாய்ப்பு உள்ளது, அதையாவது நிறுத்தினா போதும்.
-டண்டணக்கா

August 12, 2005

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.